Home One Line P1 கொவிட்19: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

கொவிட்19: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

451
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை கடந்த மாதம் நாட்டைத் தாக்கியதில் இருந்து, மாணவர்கள் சம்பந்தப்பட்ட 1,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஏழு முதல் 12 வயது வரையிலான மாணவர்களின் குழுவில், இதுவரை மொத்தம் 587 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 13 முதல் 18 வயதுடையவர்கள் குழிவில் 670 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை செப்டம்பர் 20 முதல் நேற்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரி மாதம் கொவிட் -19 பாதிப்புக் கண்டறியப்பட்டதிலிருந்து, ஏழு முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 830 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக நேற்று செய்தியாளர் கூட்டத்தில் நூர் ஹிஷாம் கூறினார்.

13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், அதே காலகட்டத்தில் மொத்தம் 1,315 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொவிட் -19 தொற்று ஏற்பட்டதிலிருந்து 12 பள்ளிகள் இதுவரை மூடப்பட்டுள்ளது. அவை சிவப்பு மண்டலத்தில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் அல்லது ஊழியர்களின் தொற்றுநோயை மேலும் பரப்பலாம் என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுர் ஹிஷாம் கூறினார்.