Home One Line P1 நாட்டை சர்வாதிகார அரசாங்கமாக மாற்ற வேண்டாம்!- அன்வார்

நாட்டை சர்வாதிகார அரசாங்கமாக மாற்ற வேண்டாம்!- அன்வார்

745
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டை ஒரு சர்வாதிகார அரசாங்கமாக மாற்றுவதற்கு “அவசரநிலை” அமல்படுத்த அமைச்சரவை முடிவை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் விமர்சித்தார்.

நாடாளுமன்ற செயல்முறையைத் தவிர்க்க, கொவிட் -19 தொற்றைக் காரணமாகப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புவதாக வெளியான செய்திகளைப் பற்றி தாம் கவலைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

“அவசரகால அறிவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது மட்டுமே செய்யப்படுகிறது.

#TamilSchoolmychoice

“ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு அரசாங்கமே காரணமாக இருக்கும்போது, ​​அவசர நடவடிக்கைகள் சர்வாதிகாரத்தை அனுமதிக்கும்

“இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய டான்ஸ்ரீ மொகிதின் யாசினிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் இது ஒரு குறுகிய பார்வை மற்றும் முக்கியமான முடிவாக மாறும்,” என்று அவர் கூறினார்.

நேற்று காலை, புத்ராஜெயாவில் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கொவிட் -19 தொற்று தொடர்பாக பேசி, “அவசரநிலை” அமல்படுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.

அதன் பிறகு, குவாந்தானில் உள்ள இஸ்தானா அப்துல்ஸிஸில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துலாசிசை பிரதமர் மாலையில் சந்தித்தார்.

நவம்பர் 23- ஆம் தேதி திட்டமிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் முதல் வாக்கெடுப்பில், மக்களவையில் அவருக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அவசரகாலத்தை” செயல்படுத்துவதன் மூலம், தேசிய கூட்டணி அரசாங்கம் கொவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் அதன் பலவீனங்களையும், அது எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியையும் எடுத்துக்காட்டுகிறது என்று அன்வார் கூறினார்.

“இந்த நெருக்கடியை வழிநடத்துவதில் அரசாங்கத்தின் திட்டம் என்னவென்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

“தொற்றுநோய் போது தரமான தலைமையை முன்னிலைப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது, மேலும் அதிகாரத்தில் இருக்கும் போது ஜனநாயகமற்ற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.