Home One Line P1 இயங்கலை நாடாளுமன்ற அமர்வை எதிர்த்த அசாருக்கு கண்டனம்

இயங்கலை நாடாளுமன்ற அமர்வை எதிர்த்த அசாருக்கு கண்டனம்

631
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்ற நடவடிக்கைகளை இயங்கலையில் நடத்த முடியாது என்று வலியுறுத்தியிருக்கும் மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் மீது சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் பாய்ந்துள்ளனய

சில நாடாளுமன்ற உறுப்பினர்களை காணொலி அமர்வு மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிப்பதில் மலேசியா, ஆஸ்திரேலியாவைப் பின்பற்றலாம் என்ற பரிந்துரைகள் இருந்தபோதிலும், அது சாத்தியமில்லை என்று அசார் விளக்கினார்.

ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, நாடாளுமன்ற அவையில் அமர்ந்திருக்காதவர்கள் கணக்கெடுப்பின்போது சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்றும் விவாதங்களில் தலையிட முடியாது என்றும் அசார் விளக்கியுள்ளார். மேலும் இயங்கலை வழியாகக் கலந்து கொள்பவர்கள் 15 நிமிடங்களுக்கு முன்னதாக முன்அறிவிப்பு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர்களால் .

#TamilSchoolmychoice

அதனால்தான் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது.

இயங்கலையில் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு ஆதரவாக இருக்கும் லெம்பா பாண்டாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாசில் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களவையின் சட்டவிதிகளில் திருத்தங்கள் தேவை என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

அசாரின் விளக்கம் சில டுவிட்டர் பயனர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. அவர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த வழிவகுத்தது.

உதாரணமாக, டுவிட்டர் பயனர் @gizmoduck13, பள்ளி குழந்தைகள் இயங்கலையில் பாடங்களில் கலந்து கொள்ள முடிந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திக்க முடியும் என்று கூறினார்.

@Mr_skadoosh என்பவர், அசார் குறைந்தபட்சம் முயற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதே நேரத்தில் சில காணொலி அமர்வு அமைப்புகள் பெரிய குழுக்களுக்கு சாத்தியமானவை என்பதை நிரூபித்திருப்பதாக @madnoh என்பவர் சுட்டிக்காட்டினார்.

நவம்பர் 2- ஆம் தேதி மக்களவை அமர்வு நடக்க உள்ளது. 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 6- ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். நவம்பர் 17- ஆம் தேதி அதற்கான வாக்களிப்பு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், அவசரகால நிலையை அமல்படுத்துவதற்கான புத்ராஜெயாவின் திட்டங்களினால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்க அனுமதிக்கப்படாது என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.