Home One Line P1 மொகிதின் யாசினின் பரிந்துரையை மலாய் ஆட்சியாளர் மன்றத்தில் மாமன்னர் பேசுவார்

மொகிதின் யாசினின் பரிந்துரையை மலாய் ஆட்சியாளர் மன்றத்தில் மாமன்னர் பேசுவார்

789
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டு வந்த அவசரகால பரிந்துரையை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடுவார்.

இந்த விஷயத்தை டத்தோ பெங்கேலோலா பிஜயா டிராஜா, அகமட் பாடில் சம்சுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“கொவிட் -19 தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு நாட்டின் நிர்வாகத்தின் தொடர்ச்சியின் அவசியத்தை அல்-சுல்தான் அப்துல்லா மிகவும் புரிந்துகொள்கிறார். உண்மையில், இந்த சமீபத்திய வளர்ச்சியின் காரணமாக மக்களின் கவலை மற்றும் அதிருப்தியைப் பற்றியும் மாமன்னர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“இதன் விளைவாக, நேற்றுமுன்தினம் நடந்த அமர்வைத் தொடர்ந்து, அல்- சுல்தான் அப்துல்லா மலாய் ஆட்சியாளர்களுடன் இஸ்தானா நெகாராவில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார்,

“இது தொடர்பாக, அல்-சுல்தான் அப்துல்லா அனைத்து மக்களையும் அமைதிப்படுத்தவும், பீதி அடையாமல் இருக்கவும், இந்த சமீபத்திய சூழ்நிலையை எதிர்கொள்ள பொறுமையாக இருக்கவும் அறிவுறுத்தினார்” என்று கூறியுள்ளார்.