கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதில் அதிகப்படியான மருத்துவ முன்னணிப் பணியாளர்கள் இப்போது பின்வாங்கி உள்ளதாக சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று எச்சரித்தனர்.
மருத்துவ ஊழியர்கள் மன மற்றும் உடல் சோர்வை அனுபவித்து வருவதாகவும், சமீபத்திய நாட்களில் சம்பவங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது ஒரு நிலையான அதிவேக உயர்வைக் கண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், சபா இடைத்தேர்தலில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் அவர் அனைவரின் ஒற்றுமையும் கோரியுள்ளார்.
“கொவிட் -19 க்கு எதிராக இந்த போரை நடத்துவதற்கு நமக்கு ஒற்றுமை தேவை,
“நம் முன்னணிப் பணியாளர்கள் கடந்த 10 மாதங்களாக 24 மணி நேரமாக பணிபுரிகின்றனர். மனம் மற்றும் உடல் சோர்வடைந்துள்ளனர். சிலர் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர். தயவுசெய்து சபா தேர்தலிருந்த் கற்றுக்கொள்ளுங்கள், ” என்று அவர் இன்று தமது டுவிட்டரில் கூறியுள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கம் அவசரகால நிலையை அறிவிக்க முற்படும் இந்நிலையில், மலேசியா கொவிட் -19 நோய்த்தொற்றின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த போராடுகிறது, இது பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.