Home One Line P1 சபாவில் கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும்

சபாவில் கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும்

540
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் தினமும் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகி வருவதால் தற்போதைய கட்டுப்பாட்டை நீட்டிக்க பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மாநில அரசின் கொவிட் -19 செய்தித் தொடர்பாளர் டத்தோ மாசிடி மஞ்சுன் (படம்) தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

” நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை, தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதலுக்குப் பிறகு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபா அரசாங்கம் முன்வைத்துள்ளது. மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

இது இன்னும் இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்குமா என்று கேட்டபோது, ​​அது தேசிய பாதுகாப்பு மன்றமே முடிவு செய்யும் என்று மாசிடி கூறினார்.

“நாங்கள் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் பரிந்துரைகளை மட்டுமே வழங்குவோம், ஏனென்றால் இறுதியில் முடிவு அவர்களிடமிருந்து வர வேண்டும். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, நீட்டிக்கப்படுமா, எவ்வளவு காலம் என்பதை தீர்மானிக்க ஒரே அதிகாரம் அவர்கள்தான், ”என்று அவர் கூறினார்.

கொவிட் -19 சம்பவங்களின் அடிப்படையில் சபா தற்போது மற்ற எல்லா மாநிலங்களையும் விட முதலிடத்தில் உள்ளது. 24,514 ஒட்டுமொத்த சம்பவங்களில் சபாவில் 10,396 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.