Home One Line P1 தேசிய கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மொகிதின் சந்திப்பு- சாஹிட் வரவில்லை

தேசிய கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மொகிதின் சந்திப்பு- சாஹிட் வரவில்லை

574
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை காலை பெர்டானா புத்ரா கட்டிடத்தில் தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மொகிதின் யாசின் ஒரு சந்திப்பை நடத்தினார்.

எவ்வாறாயினும், இந்த கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கலந்து கொள்ளவில்லை என்று அம்னோ வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

இன்று காலை 10.30 மணிக்கு திட்டமிடப்பட்ட சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு, கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

#TamilSchoolmychoice

“சபா, சரவாக் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் இன்று காலை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

“அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மட்டுமே வரவில்லை” என்று அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அம்னோ தனது பிரதிநிதியை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுப்பியாதா என்பதை வட்டாரம் உறுதிப்படுத்தவில்லை.

“அது எனக்குத் தெரியவில்லை, சாஹிட் இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

“இரண்டாவதாக, இந்த சந்திப்பு தேசிய கூட்டணியை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கானது” என்று அவர் மேலும் கூறினார்.