Home One Line P1 சுகாதார அமைச்சு இயக்குனர் சரியான கோணத்தில் தகவலை அளிக்க வேண்டும்

சுகாதார அமைச்சு இயக்குனர் சரியான கோணத்தில் தகவலை அளிக்க வேண்டும்

430
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று நாட்டின் கொவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து சுகாதார இயக்குநர் தினசரி செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக மலேசியாவின் சமீபத்திய கொவிட்-19 தொற்று நிலை குறித்த ஊடக அறிக்கை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

இரத்து செய்யப்பட்டதற்கான எந்த காரணமும் கூறப்படவில்லை.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 5.30 மணிக்கு புத்ராஜெயாவில் நடைபெற இருந்தது.

கொவிட் -19 புள்ளிவிவரங்கள் குறித்த தினசரி புதுப்பிப்பு வழக்கம் போல் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். இதனிடையே சமீபத்திய கொவிட்-19 தொற்று குறித்த தகவல்களை சுகாதார இயக்குனர் தவறான கோணத்தில் வழங்குவதாக இணைய வாசிகளிடையே வாதங்கள் எழுந்துள்ளன.

அவர் வெளியிடும் தகவல்களில் மேலும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 900 சம்பவங்கள் உள்ள சபாவை அவர் தனியாக பிரித்துக் கூறினால், கிட்டத்தட்ட 300 சம்பவங்கள் மட்டுமே இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் 80 சம்பவங்கள் மட்டுமே சிலாங்கூரைச் சேர்ந்தவையாகும்.

இம்மாதிரியாக ஒட்டு மொத்தமாக அவர் தரவுகளை வெளியிடுவது, பீதியை ஏற்படுத்தி, அவசரகாலத்தை விதிக்க அரசாங்கத்திற்கு ஒரு காரணத்தை அளித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

“சபாவைத் தவிர 300 சம்பங்களுடன் நீங்கள் தொடங்கலாம். பின்னர் சபாவில் கிட்டத்தட்ட 900 சம்பவங்கள் உள்ளன என்று கூறுங்கள். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில், இன்னும் பல பசுமை மண்டலங்கள் உள்ளன,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

80 சம்பவங்கள் இருக்கும் சிலாங்கூரில் முழு மாநிலத்தையும் கட்டுப்படுத்துவது என்ன நியாயம் என்று அவர்கள் வினவியுள்ளனர்.