“இன்று எல்லாரும் சந்திக்கிறோம்.
“எனவே, இன்றைய சந்திப்பு, ஏதேனும் சந்தேகம் இருந்தால் நாங்கள் எதையும் கேட்கலாம்” என்று கோலாலம்பூரில் அம்னோ கட்டிடத்தில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் கூறினார்.
கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து விவாதிப்பதாகவும் சாஹிடி கூறினார்.
மொகிதினுக்கான ஆதரவு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், அவர்கள் இன்னும் பிரதமருடன் இருப்பதாகக் கூறினார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஒத்மான் சைட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.