Home One Line P1 மக்கள் அதிகமாக தியாகம் செய்துள்ளனர்!- ஷாபி அப்டால்

மக்கள் அதிகமாக தியாகம் செய்துள்ளனர்!- ஷாபி அப்டால்

549
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கொவிட் -19 அச்சுறுத்தலால் நாடு பாதிக்கப்பட்டபோது மக்கள் செய்த தியாகங்களைப் பார்க்கும்போது, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலைமையை மீட்டெடுக்க உழைக்க வேண்டிய நேரம் இது என்று வாரிசான் தலைவர் முகமட் ஷாபி அப்டால் தெரிவித்தார்.

நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க பிரதமர் மொகிதின் யாசின் கோரிக்கையை ஏற்காத மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் உத்தரவை ஆதரிப்பதற்காக அவர் கூறினார்.

மக்களைப் பாதித்துள்ள கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடியும் என்பதை உறுதிப்படுத்த அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அல்-சுல்தான் அப்துல்லாவின் அழைப்பை அவர் பாராட்டினார்.

#TamilSchoolmychoice

“இந்த கடினமான காலங்களில் மக்கள் தியாகங்களை செய்துள்ளனர். எனவே இந்த சவாலான காலத்தை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு பங்களிப்பதன் மூலம் அனைத்து அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தியாகம் செய்ய வேண்டிய நேரம் இது ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.