Home One Line P1 பினாங்கு: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துகளை மறைத்த 2 ஆர்வலர்கள் கைது

பினாங்கு: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துகளை மறைத்த 2 ஆர்வலர்கள் கைது

582
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துக்களை கறுப்பு சாயம் பூசிய, இரண்டு மலாய் உரிமை ஆர்வலர்கள் இங்குள்ள பட்டாணி சாலை காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தோக் சிங்கா” என்று அழைக்கப்படும் முகமட் பிர்டாவுஸ் அட்னான் மற்றும் பாஸ் அஸ்மி ஜாபர் ஆகியோர் நேற்று இரவு 9 மணிக்கு நிலையத்தில் வருமாமாறு அதிகாரிகளால் அழைக்கப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் ஷம்ஷர் சிங் திண்ட் தெரிவித்தார்.

அதிகாலை 4 மணி வரை அவர்கள் விசாரிக்கப்பட்டு காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

தவறான செயல்களைச் செய்வதற்கும், பொது அச்சுறுத்தல்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதற்கும் தண்டனைச் சட்டத்தின் 427 மற்றும் 505 (சி) பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இயங்கலையில் தாக்குதல் உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் பிரிவு 233 கீழும் இவர்கள் விசாரிக்கப்படுவர்.

வடகிழக்கு மாவட்ட காவல் துறைத் தலைவர் சோபியன் சாண்டோங் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, இரவு இங்குள்ள சாலை பெயர்களின் சீன மொழிபெயர்ப்பை அழித்ததாக பிர்டாவுஸ் மற்றும் அஸ்மி ஆகியோர் சமூக ஊடகங்களில் தெரிவித்து, அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பதால் அதனை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறினர்.