கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளதாக மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.
நம்பிக்கைத் தீர்மானம் , தோற்கடிக்கப்பட்டால், மொகிதின் மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிட்டார் என்று பொருள்.
“பிரதமர் மீது நம்பிக்கை தீர்மானத்தை நாங்கள் பெற்றுள்ளோம்,. இந்த தீர்மானம் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து வந்தது. ஆனால், கூட்டத்தின் வரிசையில் அமைச்சின் மிக முக்கியமான பிரேரணை சேர்க்கப்படுவதற்கு நாங்கள் காத்திருப்போம்” என்று அசார் கூறினார்.
நம்பிக்கை தீர்மானத்தை யார் சமர்ப்பித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த ஜூலை மாதம் கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இதேபோன்ற தீர்மானத்தை பாஸ் சமர்ப்பித்திருந்தது.
இதற்கிடையில், மொகிதினுக்கு எதிராக மக்களவையில் 16- க்கும் மேற்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை பெற்றுள்ளார் என்பதையும் அசார் உறுதிப்படுத்தினார்.
“2021 வரவுசெலவுத் திட்டத்தை வழங்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர வேறு பல முக்கியமான திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் அஜார் கூறினார்.