Home One Line P2 ஆஸ்ட்ரோ : “சொல்லித் தொல” ஆவியுலக நகைச்சுவைத் தொடர்

ஆஸ்ட்ரோ : “சொல்லித் தொல” ஆவியுலக நகைச்சுவைத் தொடர்

599
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் ‘சொல்லி தொல’ எனும் ஆவியுலக நகைச்சுவை உள்ளூர் தமிழ் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தற்போது கண்டு களிக்கலாம்.

“சொல்லி தொல” எனும் உள்ளூர் தமிழ் தொடரை ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231)-இல், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் கண்டு களிக்கலாம்.

ரவீன்தாஸ் இயக்கத்தில் மலர்ந்த 20 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் யுவராஜ் கிருஷ்ணசாமி, ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி பெருமாள், விடியா லியானா, ஆல்வின், நவின் ஹோ மற்றும் லோகன் உட்பட பிரபல உள்ளூர் கலைஞர்களும் புது முகங்களும் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தனது அகால மரணத்திற்குப் பிறகு ‘ஆவிகளின் பரிமாணத்தில்’ (spirit dimension) நுழையும் இளைஞர் யுவாவைப் பற்றின சுவாரசியமானக் கதையை இத்தொடர் சித்தரிக்கின்றது. பூமியில் வாழும் மனிதர்களைப் போலவே ஆவிகளுக்கும் ஓர் உலகம் இருப்பதைக் கண்டறிந்தப் பின் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். யுவாவும்  அவரின் பிற வேடிக்கையான பேய் நண்பர்கள் எதிர்நோக்கும் சோதனைகள், இன்னல்கள், இவற்றோடு மயானத்தை மையமாகக் கொண்ட முக்கியக் கதையோட்டத்தை (crux of the plot) உருவாக்குகின்றன.

சமீபத்தில், இயக்குநர் ரவீன்தாஸ் மற்றும் நடிகர்களான யுவராஜ் கிருஷ்ணசாமி, ஹம்சினி பெருமாள் மற்றும் விடியா லியானா ஆகியோர் தங்களின் அனுபவங்களையும், சொல்லி தொல தொடரில் பணிபுரிந்த மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

ரவீன்தாஸ், இயக்குநர்

• இந்தத் தொடரைப் பற்றியும், இத்தொடரின் பின்னால் உள்ள உங்களின் உத்வேகத்தையும் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

ஆஸ்ட்ரோ ‘சொல்லித் தொலை’ தொடரின் இயக்குநர் ரவின்தாஸ்

மரணத்திற்குப் பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற எனது கற்பனையை ‘சொல்லி தொல’ சித்தரிக்கின்றது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பிற கூறுகளை உள்ளடக்கிய ஒரு வேடிக்கையான, மகிழ்ச்சியான கதையை அறிமுகப்படுத்த விரும்பினேன்.

உதாரணமாக, இந்த உலகில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எவ்வாறு இருப்பிடம் ஓர் அத்தியாவசியமான ஒன்றோ அதைப்போல இறந்தவர்களுக்கும் இருப்பிடம் அவசியம். நான் பார்த்தத் திரைப்படங்கள் மற்றும் சூழலின் மீது அக்கறைக் கொண்ட என்னைச் சுற்றியுள்ளவர்களே எனது உத்வேகத்துக்கு முக்கிய காரணம். மேலும், இயக்குனர், தன்முனைப்பு பேச்சாளர் மற்றும் எனது ஐடல் திரு. ஜே.கே. விக்கி, இத்தொடரின் முக்கிய கருப்பொருளாக இந்த தலைப்பை எடுக்க என்னை ஊக்கப்படுத்தினார்.

• இத்தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

இந்தத் தொடரைப் பார்க்கும் இரசிகர்கள் இந்தத் தொடரில் உரையாடல்களையும் நகைச்சுவைக் காட்சிகளையும் இரசிக்கும் வேளையில் சுற்றுச்சூழலைப் பற்றியும் அதிகம் அக்கறை கொள்ள தங்கள் இளையவர்களுக்கு கற்பிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தத் தொடர் அதிக ரசிகர்களையும் நல்ல கருத்துக்களையும் பெறும் என்று நம்புகிறேன். இது, எதிர்காலத்தில் பல சிறந்த படைப்புகளை வழங்க என்னை ஊக்குவிக்கும்.

• ஆஸ்ட்ரோ உள்ளூர் திறமைகளுக்கும் உள்ளூர் இந்திய திரைப்படத் துறைக்கும் வழங்கும் வாய்ப்புகள் குறித்து உங்களின் கருத்துக்கள் என்ன?

மலேசியத் திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு, நான் ஆஸ்ட்ரோவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். 25-வது வயதில், நான் ஒரு இளம் இயக்குநராக தொடங்கியதிலிருந்து, ஆஸ்ட்ரோ எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது.

ஒரு இளம் திறமையாளராக, ‘வெவ்வேரு ரூபம்’ எனும் எனது முதல் டெலிமூவியை இயக்க அவர்கள் எனக்கு ஓர் அற்புதமான வாய்ப்பை அளித்தனர். அதிக தொடர்கள்,  திரைப்படங்கள் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு உயர் தரமான உள்ளூர் உள்ளடக்கத்தை வழங்குவதற்கான அவர்களின் குறிக்கோளுக்கு இணங்க இளம், உள்ளூர் திறமைசாலிகளுக்கு ஆஸ்ட்ரோ பல வாய்ப்புகளை வழங்குகிறது. எனது தொழில் ரீதியாக ஆஸ்ட்ரோ அளித்த ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

நடிகர்கள்: யுவராஜ் கிருஷ்ணசாமி, ஹம்ஸ்னி பெருமாள் மற்றும் விடியா லியானா

• சொல்லி தொல தொடரில் நீங்கள் வகிக்கும் கதாபாத்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?

யுவராஜ் கிருஷ்ணசாமி

யுவராஜ்: சொல்லி தொல தொடரில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘யுவராஜ்’. நான் ‘யுவா’ என்று அழைக்கப்படுவேன். யுவா இரண்டு வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட முன்னணி கதாபாத்திரம். இது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. இருப்பினும், இத்தொடரில் ரவீன்தாஸ் என்னை இணைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஹம்ஸ்னி: இந்தத் தொடரில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘யாஸ்மின்’. அவள் ஒரு டிக் டோக் (Tik Tok) பிரபலம், கிகி சவாலைச் செய்யும்போது காலமானாள். அவள் நட்பு குணம் கொண்ட, மகிழ்ச்சியான மற்றும் சாகசப் பேய். யாஸ்மின் பேய் சலவைக் கடையில் பணிபுரிகிறாள். அதுமட்டுமின்றி, விக்கி மீது ஓர் அதீத ஈர்ப்பும் கொண்டவள்.

விடியா: சொல்லி தொல தொடரில் ‘கிருத்திகாவாக’ வலம் வந்தேன். கிருத்திகா ஒரு மகிழ்ச்சியான,  கடின உழைப்பாளியான பேய். இறுதியாக தனது கடின உழைப்பிற்கு சன்மானமாக மோகினி, சலூனின் முதலாளியானாள்.

• இந்தத் தொடரில் உங்களின் மறக்கமுடியாத சில தருணங்களைப் பகிர்வதோடு அதன் காரணங்களையும் கூறுக?

யுவராஜ்: எனது சக கலைஞர்களுடன் ‘பேய் உலகம்’ தொகுப்பில் நான் செலவிட்ட அற்புதமான அனுபவமும் நேரமும் எனக்கு மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாகும் என்று கூறுவேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் பேய் ஆடைகளிலும் மற்றும் கல்லறையில் அலங்காரம் செய்வதிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

ஹம்ஸ்னி பெருமாள்

ஹம்ஸ்னி: நிறைய மலேசியக் கலைஞர்களைச் சந்தித்ததும் அவர்களுடன் பேசிப் பழகியதும் எனக்கு மறக்க முடியாத தருணம். அதுமட்டுமின்றி, வேலை செய்தல், உறங்குதல், விளையாடுதல் அனைத்தும் கல்லறையைச் சுற்றி நடக்கையில் அது எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வைத் தந்தது.

விடியா: இந்தத் தொடரின் பயணமே எனக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கியது. மேலும், முழு அணியுடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. என்னைப் பொறுத்தவரை, மயானத்தில் ஒரு படப்பிடிப்பை மேற்கொண்டது ஓர் அற்புதமான தருணமாக அமைந்தது.

இப்படப்பிடிப்பின் போது, நான் கல்லறையின் பால் வித்தியாசமான அபிப்பிராயத்தை கொண்டிருந்தேன். தற்பொழுது, அதை ஒரு பாதுகாப்பான இடமாக கருதுகிறேன். மேலும், படப்பிடிப்பின் போது அயராது உழைக்கும் குழுவினரை பாராட்டும் வண்ணம், பாடல்களைப் பாடியதோடு இன்னும் பல சாகசங்களைப் புரிந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு நாங்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

• இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

யுவராஜ்: சொல்லி தொல தொடர் அதன் சுய வகை என்பதால், இத்தொடரின் வரவேற்பைப் பற்றி எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. நகைச்சுவைகளை இரசிக்கும் பல மலேசியர்களுக்கு இது ஏற்கனவே விருப்பமான தொடராக இருந்து வருகிறது. சொல்லி தொல தொடர் பல புதிய இயக்குனர்களுக்கு சில ஆக்கபூர்வமான மற்றும் வழக்கத்திக்கு மாறான கதை சொல்லும் யோசனைகளைக் கொண்டு வர வழிவகுக்கும் என்று நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான கதையுடன் வித்தியாசமாக சிந்தித்து வெற்றி பெற முடியும் என்று நிருபித்த இயக்குநர், ரவீன்தாஸுக்கு வாழ்த்துக்கள்.

ஹம்ஸ்னி: இந்தத் தொடரைப் பார்வையாளர்கள் விரும்புவார்கள், இரசிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு, நன்றி.

விடியா லியானா

விடியா: காட்சிகள் மற்றும் உரையாடல்கள் மூலம் பார்வையாளர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை தெரிவிக்க எங்கள் இயக்குநர் தனது சிறந்த முயற்சியை மேற்கொண்டார். விழிப்புணர்வு பார்வையாளர்களை சென்றடையக்கூடும் என்றும் அதன் விளைவுகள் ஏற்படும் என்றும் நம்புகிறேன்.