Home One Line P1 பத்து சாபி: பெர்சாத்து போட்டியிடுமா என்பது முடிவுசெய்யப்படும்

பத்து சாபி: பெர்சாத்து போட்டியிடுமா என்பது முடிவுசெய்யப்படும்

414
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பத்து சாபி இடைத்தேர்தலில் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து பெர்சாத்து சபா விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த சனிக்கிழமை திட்டமிடப்பட்ட அடுத்த பெர்சாத்து சபா கூட்டத்தில் இந்த பிரச்சனை விவாதிக்கப்படலாம்” என்று சபா பெர்சாத்து துணைத் தலைவர் மாசிடி மஞ்சுன் தெரிவித்தார்.

கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று சபாவில் இரு தரப்பிலிருந்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் முடிவு செய்தன.

#TamilSchoolmychoice

அவற்றில், நம்பிக்கைக் கூட்டணி, பார்ட்டி பெர்சாத்து சபா (பிபிஎஸ்), பார்ட்டி புரோகிரெசிப் சபா (எஸ்ஏபிபி) மற்றும் ஸ்டர் ஆகியவை அடங்கும்.

2018 பொதுத் தேர்தலில் அந்த தொகுதியை வென்ற அதன் நாடாளுமன்ற உறுப்பினர் லியூ வுய் கியோங்கின் மரணத்தைத் தொடர்ந்து வாரிசானுக்கு அந்த தொகுதியைக் தற்காக்க இது வழி வகுக்கிறது.