Home One Line P1 தீபாவளி: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்

தீபாவளி: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்

464
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீபாவளி கொண்டாட்டங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் இந்த வாரத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றம் சிறப்புக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் முதல் வரைவு விவாதிக்கப்பட்டது என்று தற்காப்பு அமைச்சரான அவர் தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பு மன்றம், முன்மொழிந்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை ஆராய்ந்து வருகிறது, மேலும் புதுப்பிப்புகள் செய்யப்படுகின்றன என்று நான் நம்புகிறேன்.

#TamilSchoolmychoice

“தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் இந்த விஷயத்தை மேலும் பகுப்பாய்வு செய்ய வேண்டும், ஏனெனில் மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்ப்பாடு மற்றும் மீட்சிக்கான கட்டுப்பாடு ஆகியவற்றின் கீழ் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் வித்தியாசமாக இருக்கும்,” என்று அவர் திங்களன்று (நவம்பர் 2) கூறினார்.

இந்த வாரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் தொகுப்பு இறுதி செய்யப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“இது முடிந்ததும் நாங்கள் அதை அறிவிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.