Home One Line P2 ‘தேர்தல் முடிவு குறித்து நீதிமன்றத்திற்குச் செல்வோம்’!- டிரம்ப்

‘தேர்தல் முடிவு குறித்து நீதிமன்றத்திற்குச் செல்வோம்’!- டிரம்ப்

685
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் டொனால் டிரம்ப் அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்களிடம் பேசினார்.

“நாம் வெற்றி பெற்று விட்டோம். கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்” என்று அப்போது அவர் கூறினார்.

ஜார்ஜியா மற்றும் வட கரோலினா உட்பட இதுவரை அறிவிக்கப்படாத மாநிலங்களை வென்றதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது அமெரிக்க பொதுமக்கள் மீதான மோசடி” என்று அவர் வெற்றியாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது குறித்து கூறினார்.

“என்னைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே வென்றுவிட்டோம்,” என்று டிரம்ப் கூறினார்.

“தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குச் செல்வோம். அனைத்து வாக்கு எண்ணிக்கையும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.

இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ஜோ பைடன் 220 தேர்தல் வாக்குத் தொகுப்புகளைப் பெற்றுள்ளார். டிரம்ப் 213 தேர்தல் வாக்குத் தொகுப்புகள் மட்டுமே பெற்று பின்தங்கியிருக்கின்றார்.