Home One Line P2 கமலா ஹாரிசுக்கு துளசேந்திரபுரத்தில் சிறப்பு வழிபாடு – அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்

கமலா ஹாரிசுக்கு துளசேந்திரபுரத்தில் சிறப்பு வழிபாடு – அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்

1031
0
SHARE
Ad

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          துளசேந்திரபுரம் (திருவாரூர்) : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ். இவரது தாய்வழித் தாத்தா கோபாலன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு, துளசேந்திரபுரம் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.

எனவே, கமலா ஹாரிசின் வெற்றியைத் தொடர்ந்து கிராம மக்களுடன், தமிழக உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் இணைந்து இந்த வெற்றியைக் கொண்டாடினார்.

துளசேந்திரபுரத்தில் உள்ள தர்மசாஸ்தா ஆலயத்தில் கமலா ஹாரிசுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த ஊர் மக்களுடன், அமைச்சர் காமராஜூம் கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கமலா ஹாரிசின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

#TamilSchoolmychoice