Home One Line P1 அனைத்து பொதுத் தேர்வுகளும் பிப்ரவரி, மார்ச்சுக்கு ஒத்திவைக்கப்படும்

அனைத்து பொதுத் தேர்வுகளும் பிப்ரவரி, மார்ச்சுக்கு ஒத்திவைக்கப்படும்

448
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், எஸ்பிஎம், எஸ்விஎம், மற்றும் எஸ்டிஏஎம் தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 வரை ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் தெரிவித்துள்ளார்.

எஸ்டிபிஎம்) அடுத்த ஆண்டு மார்ச் 8- ஆம் தேதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், மேலும் விவரங்கள் பின்னர் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

“2020- ஆம் ஆண்டில் பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் தேர்வுக்கு அமர்வதற்கு முன் போதுமான ஏற்பாடுகளைச் செய்ய உதவுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 20- ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் பள்ளி அமர்வைத் தொடர முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

“பள்ளி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கால அவகாசம் பயனளிக்கும் என்று கல்வி அமைச்சு நம்புகிறது” என்று அமைச்சர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அமைச்சகம் வழங்கிய விதிகள் தனியார் பள்ளிகளுக்கும், அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட எல்லா கல்வி நிறுவனத்திற்கும் பொருந்தும் என்று அவர் கூறினார்.

“கல்வி அமைச்சுடன் பதிவு செய்யப்படாத பள்ளிகளுக்கு, அவர்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

அனைத்து மதிப்பீடுகளையும் அமைச்சகம் மறுபரிசீலனை செய்யும் என்றும், 2020 டிசம்பர் வரை திட்டமிடப்பட்டிருந்த எஸ்பிஎம் சோதனைத் தேர்வுகள், பாடநெறி மற்றும் மதிப்பீடுகளை பின்னர் அறிவிக்கும் என்றும் ராட்சி கூறினார்.

இதனிடையே, பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வுகளுக்கான தேதியை உறுதியாக நிர்ணயிக்கும்படி கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அடிக்கடி தேர்வுக்கான தேதிகளை மாற்றுவது சரியாக இருக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.