வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்19 தொற்றுப் பரவலைத் தடுக்க புதிய அதிபர் ஜோ பைடன் அமைக்கவுள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி தலைவராக மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் அதிபர் லொனால்டு டிரம்ப் ஆட்சியில் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்ட நிலையில், குறிப்பாக கொவிட்19 தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
உலகளவில் கொவிட்19 தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா மாறியது.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது, அமெரிக்காவின் அருவை சிகிச்சை இயக்குனராக உயர் பதவியில் இருந்தார். டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் விவேக் மூர்த்தி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.