Home One Line P1 வரவு செலவு திட்ட விவாதத்தில் 80 பேர் இருப்பது அரசியலமைப்பிற்கு எதிராக இல்லை

வரவு செலவு திட்ட விவாதத்தில் 80 பேர் இருப்பது அரசியலமைப்பிற்கு எதிராக இல்லை

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விவாதக் கூட்டத்தின்போது நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசியலமைப்பில் எங்கும் கூறவில்லை என்று மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அசிசான் ஹருண் இன்று தெரிவித்தார்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் ஒரு சூடான பவிவாதத்தில், அசார், 222 நாடாளுமன்ற உறுப்பினர்களை விவாத அமர்வின் போது இருக்க வேண்டும் என்று மத்திய அரசியலமைப்பு குறிப்பிடவில்லை என்று கூறினார். கூட்டத்தின் விதிபடி 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார்.

“மத்திய அரசியலமைப்பின் 96 மற்றும் 97 வது பிரிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். 96 மற்றும் 97 வது பிரிவு 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லா நேரங்களிலும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று கூறவில்லை, ”என்று அசார் கூறினார்.

#TamilSchoolmychoice

“அது எங்கே உள்ளது? இல்லை. கூட்டரசு அரசியலமைப்பில் எல்லா நேரங்களிலும் நான் மக்களவையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்க வேண்டும் என்று எங்கே கூறுகிறது?,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தனது முடிவு இறுதியானது என்றும் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும் அசார் கூறினார்.