கோலாலம்பூர்: அமெரிக்க துணை அதிபர் கமலா தேவி ஹாரிஸை “இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவரின் மகள்” என்று அழைத்ததற்காக டிவி3 மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
அதன் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் மன்னிப்பும் டுவிட்டரில் பதிவேற்றப்பட்டது.
“நேற்று புல்லட்டின் 1.30 செய்தி அறிக்கையில், அமெரிக்காவின் புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொடர்பான தவறுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று அச்செய்தி நிலையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மஇகா செனட்டர் எஸ். வேள்பாரி இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தினார்.
கமலாவின் தாயார், ஷியாமலா கோபாலன் தனது 19 வயதில் சென்னையில் இருந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகச் என்றார். அங்கு அவரது தந்தையை சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என்று அவர் கூறினார்.
“அவரது தாயார் மேம்பட்ட புற்றுநோயியல் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு விஞ்ஞானி.” என்று அவர் கூறினார்.
“புலம்பெயர்ந்தோர்” என்ற வார்த்தையை நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு தற்செயலான தவறு என்று நான் நம்புகிறேன், “என்றார் வேள்பாரி.