கோலாலம்பூர்: எண்ணெய் நிலைய கடைகளுக்குள் நுழையாமல் எண்ணெய் நிரப்பினால், மைசெஜதெரா பைபேசி பயன்பாட்டை பயன்படுத்தி பதிவு செய்யத் தேவையில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இது தொடர்பான முரண்பாடான அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறி உள்ளார்.
“எண்ணெய் நிலைய கடைக்குள் பொருட்கள், எண்ணெய் நிரப்ப பணம் செலுத்த, பணம் எடுக்க விரும்புவோர், மைசெஜ்தெராவில் பதிவு செய்ய வேண்டும்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
எண்ணெய் நிலைய கழிப்பறை அல்லது சூராவைப் பயன்படுத்துபவர்களும் இவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, எண்ணெய் நிலையங்களில் மைசெஜாதெரா கைபேசி பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும் என்று சிபிஆர்சி ஒருங்கிணைப்பாளர் ஜாமால் அப்துல் நசீர் தெரிவித்திருந்தார்.
எண்ணெய் நிலைய கடைகளில் நுழையாவிட்டாலும், கடன் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த விதி கட்டாயமாகும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.