Home One Line P1 தேசிய கூட்டணியின் 15-வது பொதுத் தேர்தல் இயக்குனராக அஸ்மின் நியமனம்

தேசிய கூட்டணியின் 15-வது பொதுத் தேர்தல் இயக்குனராக அஸ்மின் நியமனம்

523
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்தை தேசிய கூட்டணி பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நவம்பர் 9 அன்று கூடிய தேசிய கூட்டணி உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மாநில அளவில் கட்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தேசிய கூட்டணி மாநில தொடர்பு அமைப்பை அமைக்க உச்சமன்றக் குழு ஏகமனதாக ஒப்புக் கொண்டுள்ளது.

“இதன் அடிப்படையில், தேசிய கூட்டணி தலைவர் மாநில தொடர்பு அமைப்பின் தலைவரை நியமிப்பார். அவர்கள் மாநில தொடர்பு அமைப்பின் அனைத்து கூட்டங்களையும் அழைத்து தலைமை தாங்குவார்கள்.

“அது தவிர, கட்சியின் தேர்தல் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருந்து, தலைமை தாங்க தேசிய கூட்டணி தேர்தல் இயக்குநராக முகமட் அஸ்மின் அலியை நியமிக்க தேசிய கூட்டணி உச்சமன்றக் குழு ஏகமனதாக ஒப்புக் கொண்டது,” என்று அவர் கூறினார்.