Home One Line P1 சிலாங்கூர் நீர் மாசுபாடு, காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

சிலாங்கூர் நீர் மாசுபாடு, காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

497
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய நீர் மாசுபாடு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். நேற்று நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூடுவதற்கு வழிவகுத்த இந்த மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ரந்தாவ் பஞ்சாங் மற்றும் சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டம் 1, 2, மற்றும் 3 தற்காலிகமாக மூடியதன் விளைவாக மாலை 6 மணி முதல் கிள்ளான் பள்ளத்தாக்கின் 1,279 பகுதிகளில் 1,139,008 வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்சில் அகமட் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து ஆயர் சிலாங்கூர் அமலாக்க அதிகாரியிடமிருந்து நேற்று மதியம் 3 மணியளவில் காவல் துறைக்கு அறிக்கை கிடைத்தது.

வேளாண் நோக்கங்களுக்காக, மனிதர்கள் அல்லது விலங்குகளின் நுகர்வு அல்லது எந்தவொரு உற்பத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக நீர் விநியோகம் குறைந்துபோகக்கூடிய குற்றங்களைச் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 430-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சுங்கை சிலாங்கூரில் நீர் மாசுபாட்டிற்கு காரணமானவர்களை கைது செய்ய வழிவகுக்கும் வகையில், தகவல், ஆதாரங்களுடன் வருபவர்களுக்கு எவருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் 5,000 ரிங்கிட் பரிசு வழங்குவதாகக் கூறியுள்ளது.

“வழங்கப்பட்ட வெகுமதி 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டுக்கு ஏற்ப அமைந்துள்ளது. இது நதி மாசுபாடு பிரச்சனை உட்பட, எல்லா தவறான நடத்தை மற்றும் சட்ட மீறல்கள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய எல்லா தரப்புக்கும் வழங்கப்படும்.

“இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமாக கருதுகிறேன், ஏனெனில் இந்த ஆண்டு மாசு காரணமாக சிலாங்கூரில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏழு முறை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.