Home One Line P1 உந்தோக் மலேசியா: தன்னார்வ தொண்டு அமைப்பை மஸ்லீ தொடங்கினார்

உந்தோக் மலேசியா: தன்னார்வ தொண்டு அமைப்பை மஸ்லீ தொடங்கினார்

557
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக, நம்பிக்கைக் கூட்டணியுடன் கல்வி பிரச்சனைகள் குறித்து தனது புதிய தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பணியாற்றுவார் என்று கூறியுள்ளார்.

“கல்வியில் பங்களிக்க விரும்பும் பலமான, நம்பிக்கைக்குரிய மற்றும் வலுவான மக்கள் என்னிடம் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“இப்போது கல்வியைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன்.

#TamilSchoolmychoice

“எனவே, இப்போது எனது நிலை நான் இன்னும் ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்தான், ஆனால், நாடாளுமன்றத்தில், நான் எதிர்க்கட்சியுடன் இருக்கிறேன். நாங்கள் நம்பிக்கைக் கூட்டணியுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம்,” என்று மஸ்லீ கூறினார்.

நவம்பர் 2- ஆம் தேதி டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிய கட்சி பெஜுவாங்கிலிருந்து விலகிய பின்னர் மஸ்லீ பிகேஆரில் சேருவார் என்ற ஊகம் இருந்தது.

அன்வார் இப்ராகிமிற்கு ஆதரவாக சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திட்டீர்களா என்று கேட்டபோது, மஸ்லீ மாலிக், “இந்த அரசியலமைப்பால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்போது, நான் கல்வியில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று எம்எம்டியிடம் கூறியுள்ளார்.

புதிதாக தொடங்கப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்பான, ‘உந்தோக் மலேசியா’, கல்வியில் மிக முக்கியமான பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.