Home One Line P1 நீர் விநியோகத் தடை: நால்வர் கைது!

நீர் விநியோகத் தடை: நால்வர் கைது!

697
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று மாலை முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிள்ளான் பள்ளத்தாக்கு வீடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டதை அடுத்து, இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் நால்வரை கைது செய்துள்ளனர்.

சுங்கை சிலாங்கூரின் சமீபத்திய துர்நாற்ற மாசுபாடு காரணமாக கடந்த 12 மணி நேர்த்திற்கும் மேலாக நீர் விநியோகத்தடையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் நிலைமை சரியாகும் என்று ஆயர் சிலாங்கூர் சற்று முன்னர் கூறியிருந்தது.

சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் பாட்சில் அகமட் கூறுகையில், 33 முதல் 43 வயதுக்குட்பட்ட நான்கு பேரும் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கோம்பாக், டாமான்சாரா மற்றும் கெளனா ஜெயா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவர்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்களில் ஒருவர் வங்காளதேச ஆடவர்.

ரவாங்கில் உள்ள ஜாலான் வெலோக்ஸ் 2- இல் வளாகத்தின் குத்தகைதாரராக அந்தப் பெண், எஸ்.எஸ்.எம்மில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

வேதியியல் பொருட்களை வாடகை வளாகத்தில் சேமித்து வைத்திருந்த ஆண்களில் ஒருவருக்கு வங்காளதேச ஆடவர் பணியாற்றினார் என்று தெரியவந்துள்ளது.

“வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கழிவுநீர் துவாரம் வழியாக ரசாயனக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு மாசுபட்ட பகுதிக்கு பாய்ந்தன என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.