கோலாலம்பூர்: கடந்த எட்டு மாதங்களில் கோலாலம்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான 42 சொத்துக்களை விற்றதாகக் கூறிய செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கொக் வாய் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.
தானின் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்றும், அதனால் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக அனுவார் கூறினார். செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்ப வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதற்கு பதிலாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பை தேர்வு செய்தார்.
“நாடாளுமன்றத்திற்கு வெளியே நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டவை. எனவே, தான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது வழக்கறிஞர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன், ஏனெனில் இந்த குற்றச்சாட்டுகளை நான் தீவிரமாக கருதுகிறேன், ”என்று அனுவார் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.