Home One Line P1 நம்பிக்கை தீர்மானத்தை அரசாங்கமே கொண்டு வர வேண்டும்!

நம்பிக்கை தீர்மானத்தை அரசாங்கமே கொண்டு வர வேண்டும்!

510
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். இந்த தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

2021 வரவு செலவு திட்ட விவாதத்தின் போது பேசிய சாஹிட், இதுபோன்ற தீர்மானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், மற்றும் நிலையான உத்தரவுகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று கூறினார்.

“இந்த ஆகஸ்ட் நாடாளுமன்ற அமர்வு இதற்கான சிறந்த கட்டமாகும்.

#TamilSchoolmychoice

“இது நம்பிக்கை தீர்மானம் மூலமாக வெற்றிப்பெற்றாலும், இல்லையென்றாலும், இந்த மக்களவையில் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

“அரசாங்கமே இதற்கு முன்னுரிமை கொடுத்து, அரசாங்க தீர்மானமாக மாற்றட்டும்,” என்று அவர் கூறினார்.

அரசியல் ஒத்துழைப்பில் நேர்மையின் அவசியம் குறித்து கருத்து தெரிவித்த பின்னர் அவர் இதனை கூறினார்.

தற்போது பிரதமர் மொகிதின் யாசினுக்கு அரசாங்க ஆதரவாளர்களிடமிருந்து இரண்டு நம்பிக்கை தீர்மானங்கள் உள்ளன, ஆனால் அவை வரிசைப்படி கீழே உள்ளன. அவை இந்த நாடாளுமன்ற அமர்வில் இது விவாதிக்கப்படாது.