Home One Line P1 காவல் துறை அதிகாரிகளுக்கு உடல் புகைப்படக்கருவி பொருத்தப்படும்

காவல் துறை அதிகாரிகளுக்கு உடல் புகைப்படக்கருவி பொருத்தப்படும்

467
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறை அதிகாரிகளின் உடம்பில் அடுத்த ஆண்டு முதல் புகைப்படக் கருவிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் துறையின் நேர்மையை நிலைநிறுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக 2021 முதல் உபகரணங்கள் கொள்முதல் செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பணியில் இருக்கும் காவல் துறை உறுப்பினர்கள் உடலில் புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்துவது அத்துறையின் நற்பெயரை நிலைநிறுத்துவதோடு மக்களின் நேர்மறையான பார்வையை அதிகரிக்கும். மேலும், கடமைகளைச் செய்யும்போது குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க முடியும்.

#TamilSchoolmychoice

உள்நாட்டு விவகார அமைச்சின் கூற்றுப்படி, காவல் துறை உறுப்பினர்கள் துறையில் தங்கள் கடமைகளைச் செய்யும்போது புகார்கள், தவறான நடத்தை மற்றும் ஊழல் வழக்குகளை குறைக்க பெறப்பட்ட நேர்மறையான முடிவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த புகைப்படக் கருவி திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

“இது தவிர, சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதோடு, காவல்துறைக்கும் சமூகத்துக்கும் இடையே நேர்மறையான உறவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.