Home One Line P1 வரவு செலவு திட்டத்தை நிராகரிப்பவர்கள் மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள்!

வரவு செலவு திட்டத்தை நிராகரிப்பவர்கள் மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள்!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கும் எவரும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தவர்கள் என்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் இன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை குறிப்பிட்டுக் கூறினார்.

“எனது நண்பர் பெக்கான் (பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப்) உட்பட வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும் எவரும், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பவர்கள்,” என்று ஷாஹிடான் காசிம் கூறினார்.

வேலை இழந்தவர்கள் வரவு செலவு திட்டம் ஒப்புதல் பெறக் காத்திருக்கிறார்கள், எனவே அவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாம் வரவு செலவு திட்டத்தை நிராகரித்தால், நாம் அவர்களுக்கு நியாயமற்றவர்களாக இருப்போம்,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், நஜிப், பணியாளர்கள் ஈபிஎப்- லிருந்து பங்களிப்பாளர்களுக்கு 10,000 ரிங்கிட் திரும்பப் பெற அனுமதித்தால் மட்டுமே தேசிய முன்னணி வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கும் என்றும், கடன் தள்ளுபடியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.