Home அரசியல் பக்காத்தான் சின்னங்களைப் பயன்படுத்தத் தயார் – பிஎஸ்எம் அறிவிப்பு

பக்காத்தான் சின்னங்களைப் பயன்படுத்தத் தயார் – பிஎஸ்எம் அறிவிப்பு

647
0
SHARE
Ad

Pakatan-PSM1-300x202கோலாலம்பூர், ஏப்ரல் 16 – பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தி, பக்காத்தான் மத்திய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிக்கு உதவும் விதமாக, பிஎஸ்எம் (Parti  Sosialis Malaysia) கட்சி பக்காத்தானுடன் சுமூக உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

நேற்று வரை தங்களது கை முஷ்டி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பிடிவாதமாக இருந்து வந்த பிஎஸ்எம் கட்சி, இன்று பக்காத்தானின் எந்த சின்னத்திலும் போட்டியிடத் தயார் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து பிஎஸ்எம் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டியை ஏற்படுத்த விரும்பாமல் பக்காத்தானின் வேண்டுகோளை ஏற்று, அவர்களது சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம். ஆனால் கடந்த தேர்தலில் பிஎஸ்எம் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட கட்சியின் தேசிய குழு முடிவெடுத்துள்ளது.

அத்தொகுதிகளில் பிஎஸ்எம் கட்சிக்கு வழி விடாமல், பிகேஆர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் பட்சத்தில், மீண்டும் பழைய முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய நிலை வரும்” என்று தெரிவித்துள்ளார்.