Home One Line P1 எம்ஏசிசி: 2019- இல் 23 விழுக்காடு கைது இலஞ்சம் தொடர்பானது

எம்ஏசிசி: 2019- இல் 23 விழுக்காடு கைது இலஞ்சம் தொடர்பானது

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 2018-ஆம் ஆண்டை விட 2019-இல் 23 விழுக்காடு அதிகமான கைதுகளை மேற்கொண்டுள்ளது. முக்கியமாக இலஞ்சம் மற்றும் தவறான உரிமைகோரல் வழக்குகள் தொடர்பான கைதுகளை, சமீபத்திய குற்ற புள்ளிவிவர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், ஏழு மாநிலங்களில் கடந்த ஆண்டு தேசிய சராசரி விகிதத்தை விட குற்றக் குறியீட்டு விகிதம், மேம்பட்டுள்ளதாக தலைமை புள்ளிவிவர நிபுணர் முகமட் உஜீர் மஹிடின் தெரிவித்தார்.

2019- ஆம் ஆண்டில் 100,000 மக்கள்தொகைக்கு, குற்ற குறியீட்டு விகிதம் 256.6 ஆக இருந்தத. இது 2018- இல் 273.5- ஆக இருந்தது.

#TamilSchoolmychoice

ஏழு மாநிலங்கள் சரவாக் (214.6), பெர்லிஸ் (207.5), பேராக் (195.8), பகாங் (195.7), கிளந்தான் (188.2), திரெங்கானு (150.3) மற்றும் சபா (143.5) ஆகும்.

பினாங்கு, சரவாக் மற்றும் திரெங்கானு தவிர, நாடு முழுவதும் குற்றக் குறியீட்டு விகிதம் குறைந்து வருவதாக உஜீர் கூறினார்.

சிறார் குற்றவியல் புள்ளிவிவரங்களில், 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 2018-இல் 5,294 வழக்குகளில் இருந்து 8.7 விழுக்காடு குறைந்து கடந்த ஆண்டு 4,833 வழக்குகளாக குறைந்துள்ளது.

“குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை 9.2 விழுக்காடு குறைந்துள்ளது, அதே சமயம் பெண்கள் 290 வழக்குகளுடன் முந்தைய ஆண்டைப் போலவே உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

2019- ஆம் ஆண்டில் பெரும்பான்மையான குற்றங்களுக்கு ஆண்கள் தான் காரணம் என்றும், அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. இதில் போதைக்கு அடிமையானவர்களில் 95.7 விழுக்காட்டு பேரும், ஊழல் தொடர்பான குற்றங்களுக்காக 82.9 விழுக்காட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டனை பெற்ற ஆண் கைதிகளின் எண்ணிக்கையும் 89.5 விழுக்காடாக இருந்தது.