Home One Line P1 திரெங்கானு: மூத்த குடிமக்களுக்கு 50 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கப்படும்

திரெங்கானு: மூத்த குடிமக்களுக்கு 50 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கப்படும்

557
0
SHARE
Ad

கோலா திரெங்கானு: தகுதியான மூத்த குடிமக்களுக்கு போதுமான நிபந்தனைகளுடன் மாதத்திற்கு 50 ரிங்கிட் ஓய்வூதிய பணத்தை வழங்க திரெங்கானு அரசு ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய பணம் வழங்குவது 14- வது பொதுத் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக மாநில மக்கள் நலன், பெண்கள் மேம்பாடு, குடும்பம் மற்றும் தேசிய ஒற்றுமைக் குழுவின் தலைவர் ஹனாபியா மாட் தெரிவித்ததாக ஹாராகா டெய்லி தெரிவித்துள்ளது.

“இந்தத் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே, மேலும், வேறு நிலையான வருமான ஆதாரங்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

#TamilSchoolmychoice

“மாவட்ட அலுவலகத்தில் கிடைக்கும் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பெறுநர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்.

“வருங்கால ஓய்வூதியம் பெறுபவர்கள், சமூக நலத்துறை, திரெங்கானு இஸ்லாமிய மத மற்றும் வாடிக்கையாளர் மன்றம் (மைதம்), சொக்ஸோ மற்றும் ஓய்வூதிய பெறுநர்கள் உள்ளிட்ட எந்தவொரு அரசு நிறுவனத்திலிருந்தும் மாதாந்திர உதவி பெறுபவர்களாக இருக்கக் கூடாது,” என்று அவர் கூறியுள்ளார்.

மூத்த குடிமக்களின் ஓய்வூதிய திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் கிராம சமூக மேலாண்மை மன்றம் மூலம் விநியோகிக்கப்படும் என்று ஹனாபியா கூறினார்.

வேறு விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.