Home One Line P1 கெடா, மலாக்கா, திரெங்கானு, ஜோகூரில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது

கெடா, மலாக்கா, திரெங்கானு, ஜோகூரில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது

600
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூலிம் மாவட்டத்தைத் தவிர நவம்பர் 21 முதல் கெடா, மலாக்கா, திரெங்கானு, ஜோகூர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ஜோகூரில் உள்ள மெர்சிங் மற்றும் கோத்தா  திங்கி மாவட்டங்கள் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் இருக்கும், ஏனெனில் அங்கு செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது.

இந்த பகுதிகளில் கொவிட் -19 நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால் புத்ராஜெயா இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice