கோத்தா கினபாலு: செப்டம்பர் 26 மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, சபா சட்டத்துறைத் தலைவர் பிரெண்டன் கீத் சோ தனது பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் அதிகரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“புதிய அரசியல் தலைமைக்கு உதவுவதில் சட்டத்துறை தலைவரின் நிலைப்பாடு முக்கியமானது என்பதால் மாற்றம் தேவை,” என்று அந்த ஆதாரம் கூறியுள்ளது.
தேசிய முன்னணி , தேசிய கூட்டணி மற்றும் பெர்சாத்து சபா ஆகியோரைக் கொண்ட காபுங்கான் ரக்யாட் சபாவுடன் (ஜிஆர்எஸ்) பணிபுரியும் ஒருவரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள் என்று அந்த வட்டாரம் கூறியது.
ஜூலை 24-ஆம் தேதி, முன்னாள் சபா முதலமைச்சர் ஷாபி அப்டால், சபா ஆளுநர் ஜுஹர் மஹிருடினின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் சோ அப்பதவியில் நியமிக்கப்பட்டதாக அறிவித்தார்.
புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காக சபா தேர்தலில் காபுங்கான் ராக்யாட் சபா வெற்றி பெற்றது. தேசிய முன்னணி, தேசிய கூட்டணி மற்றும் பிபிஎஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜிஆர்எஸ் 38 இடங்களை வென்றது.
வாரிசான் பிளாஸ் – வாரிசான், ஜசெக, பிகேஆர் மற்றும் உப்கோ ஆகியவற்றை உள்ளடக்கியது – 32 இடங்களை வென்றது.
மற்றொரு மூன்று இடங்கள் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றனர். அவர்கள் மாநில அரசாங்கத்தில் ஜிஆர்எஸ் உடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.