Home One Line P2 பாகிஸ்தானில் 1,300 வருட விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானில் 1,300 வருட விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு

758
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: பாகிஸ்தானில், பரிகோட் குண்டாய் என்ற இடத்தில், சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் புத்த மதம் சார்ந்த வழிபாட்டு தலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வடக்கு பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மலையில் பாகிஸ்தானிய மற்றும் இத்தாலிய தொல்லியல் துறை வல்லுநர்களால் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தலம் விஷ்ணுவின் கோயில் என கைபர் பக்துங்காவா தொல்லியல் துறை வல்லுநரான பாஸ்லே காலிக் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

1300 ஆண்டுகளுக்கு முன் இந்து ஷாஹி காலக்கட்டத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதைய கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தானில் உள்ள காந்தரா பகுதிகளை இந்து ஷாஹிக்கள் ஆண்டுகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அகழ்வாராய்ச்சியில் இராணுவ முகாம், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோயிலின் குளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.