Home One Line P2 இமாசலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்திற்கே கொவிட்-19 தொற்று

இமாசலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்திற்கே கொவிட்-19 தொற்று

502
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில், இமாசலப் பிரதேசத்தில் லஹுவால் பள்ளத்தாக்கில் உள்ள தொராங் கிராமத்தில் வாழும் அனைவருக்கும் கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

அங்கு கொவிட்-19 பாதிப்பு அதிகமாகியுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொராங் கிராமத்தில் 42 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டபோது, 41 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

பூஷன் தாகூர் என்ற 52 வயது நபருக்கு மட்டுமே தொற்று இல்லை. ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கிராமவாசிகள் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளனர். இதனால்தான் ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.