கோலாலம்பூர்: புத்ராஜெயாவை திரும்பப் பெறுவதற்கான நம்பிக்கைக் கூட்டணி திட்டத்தில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது ஈடுபாட்டை ஏற்க மறுத்ததால் முயற்சி தோல்வியடைந்தது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார்.
“தேசிய கூட்டணி அரசாங்கத்தை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. எனது கட்சியும் எனது ஆதரவாளர்களும் இந்த முயற்சியில் சேர ஒப்புக்கொண்டார்கள்.
“ஆனால், அன்வார் எனது பங்கேற்பை முற்றிலுமாக நிராகரித்தார். நான் நிராகரிக்கப்பட்டால், எனது ஆதரவாளர்கள் இந்த திட்டத்தில் சேர மாட்டார்கள். மேலும் மக்களவையில் மூன்று உறுப்பினர்களை நாங்கள் (பெரும்பான்மை) போதுமானதாகப் பெற மாட்டோம்,” என்று அவர் இன்று வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தார்.
அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன்பு ஆறு மாதங்களுக்கு பிரதமர் பதவியை வகிக்க முன்மொழியப்பட்டதாக மகாதீர் கூறினார்.
“அமானாவும் சில ஜசெக உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டனர், ஆனால் அன்வார் மறுத்துவிட்டார். அன்வார் என்னை ஈடுபடுத்த விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
செப்டம்பர் மாதம் அன்வார் பெரும்பான்மையைப் பெற்றதாக அறிவித்தபோது தனது குழுவை விலக்கிவிட்டதாகவும் மகாதீர் கூறினார்.
“ஆனால், அன்வார் இன்னும் பிரதமராக முடியாததை நாம் அனைவரும் அறிவோம். அவரிடம் ஆதரவு போதுமானதாக இருக்கிறது என்று அன்வார் கூறியது பொய்யானது.
“அன்வாரின் திட்டத்தில், எனக்கு இடமில்லை. என்னை ஒதுக்கி வைத்த பிறகு, அன்வார் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகிறது.
“2008-இல் கூட அன்வார் தோல்வியடைந்தார். நானா அன்வாரைத் தடுத்தேன்?” என்று அவன் கேள்வி எழுப்பினார்.
அன்வார் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக மகாதீருடன் பணியாற்றினார்.
இருப்பினும், இருவரும் உடன்படவில்லை, மகாதீர் பின்னர் அவரை துணை பிரதமராக நீக்கி சிறையில் அடைத்தார்.
1எம்டிபி ஊழலுடன் தொடர்புடைய அப்போதைய பிரதமரும், அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்கொள்ள அவர்கள் 2016-இல் சமாதானம் செய்தனர்.
2018- பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றிக்கு இந்த சமாதானம் பங்களித்தது.