Home One Line P1 அனுவார் மூசா அம்னோவுடன் இல்லை, தேசிய கூட்டணிக்கும் செல்ல விரும்பவில்லை!

அனுவார் மூசா அம்னோவுடன் இல்லை, தேசிய கூட்டணிக்கும் செல்ல விரும்பவில்லை!

579
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: அனுவார் மூசா அம்னோ போராட்டத்தில் எப்போதோ “இறந்துவிட்டார்” என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் வர்ணித்துள்ளார்.

“அவர் அம்னோவில் ‘இறந்துவிட்டார்’, ஆனால் தேசிய கூட்டணிக்கு செல்ல அவர் விரும்பவில்லை,” என்று அவர் சுருக்கமாக தெரிவித்தார்.

அம்னோ சுய உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், மொகிதின் யாசின் அமைச்சரவையில் கட்சி பெற்ற நலன்களைப் பற்றி கேள்வி கேட்க உரிமை இல்லை என்று வலியுறுத்திய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் அனுவார் மூசாவின் கூற்றுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் ஷாரில் ஹம்டானுக்கு அளித்த பதிலில், அனுவார் கட்சியின் சில உறுப்பினர்கள், அம்னோ ஒரு தோல்வியுற்ற கட்சி என்றும் வீழ்ந்துவிட்டதை மறந்துவிட்டதாகவும் அனுவார் கூறினார்.

கட்சியின் மூத்த உறுப்பினரான ஷாஹிர் சமாட், அனுவாரின் அறிக்கை அசாதாரணமானது என்று விவரித்தார், ஏனெனில் இது தேசிய முன்னணி பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டது, பெர்சாத்து அல்லது பாஸ் தலைவர்களால் அல்ல என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

“அம்னோ சுயஉணர்வுடன் இருக்க வேண்டும், என்றார் அனுவார் மூசா எனும் தலைப்பு ஒரு சாதாரண விசயம் மட்டுமே என்று நான் நினைக்கிறேன். ஒரே ஒரு அசாதாரண விஷயம் இது அனுவார் மூசாவின் கருத்து. பெர்சாத்து அல்லது பாஸ் கட்சியின் கருத்து அல்ல.

“15-வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணிக்கு 2 விருப்பங்கள் மட்டுமே உள்ளன, அதாவது முதலாவது, தனியாக நின்று போட்டியிடுவது அல்லது 2- வது, தேசிய கூட்டணியுடன் உடன் இணைவது,” என்று அவர் கூறினார்.

அனுவார் கட்சியின் போராட்டத்தின் அடிப்படையை விட அரசியல் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்று ஜோகூர் பாரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“தனது சொந்த கட்சியையே கேலி செய்வது, அதாவது சுய உணர்வுடன் இல்லாமல் இருப்பதாகக் கூறுவது, கட்சியின் தலைமை இதனை உணராமல் இருப்பதாகவும், பாஸ் மட்டும்தான் தேசிய கூட்டணியை தற்காக்குமென்றும் கூறுவது, முவாபாகாட் நேஷனலினால் மட்டுமே சாத்தியம் போல கூறியுள்ளார்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.