Home One Line P1 பெர்சாத்து இல்லாமல் பாஸ், அம்னோவுடன் இணைய சாத்தியமில்லை!

பெர்சாத்து இல்லாமல் பாஸ், அம்னோவுடன் இணைய சாத்தியமில்லை!

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் கட்சி உடன் மட்டுமே அடுத்த பொதுத் தேர்தலில் களம் இறங்க நினைக்கும் அம்னோவின் திட்டங்கள் இனி, ஒரு தேர்வாக இல்லை என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா கூறியுள்ளார்.

ஏனென்றால், அம்னோவும், பெர்சாத்துவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பாஸ் வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

“எங்கள் ஆய்வில், அம்னோ மற்றும் பாஸ் பலங்களைக் கொண்டுள்ளன. மேலும் அடுத்த பொதுத் தேர்தலில் அவை வெற்றி பெறலாம்.

#TamilSchoolmychoice

“ஆனால், பாஸ் கட்சியைக் கேளுங்கள், பெர்சாத்துவை விட்டுவிட்டு, அம்னோ மற்றும் பாஸ் (ஒன்றாக) என்ற கருத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

“இந்த தேர்வு இனி இல்லை. அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து ஆகியவை ஒன்றுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாஸ் கொண்டுள்ளது” என்று அனுவார் மூசா அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் ஷாரில் ஹம்டானுடன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

புதன்கிழமை நடந்த முவாபாகாட் நேஷனல் கூட்டத்தின் போது இது குறித்து பாஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது என்று அனுவார் கூறினார்.

அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து பணியாற்றுவது நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிராக குறைந்தது ஆறு இடைத்தேர்தல் வெற்றிகளுக்கு வழிவகுத்தது.

அடுத்த பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றாகப் போட்டியிட்டால், அவர்கள் மொகிதினின் பெர்சாத்துவைத் ஒதுக்கிவிட்டு புத்ராஜெயாவைக் கைப்பற்றலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பாஸ் இப்போது பெர்சாத்துவின் தேசிய கூட்டணியில் உறுப்பினராக உள்ளது.

பெர்சாத்துவை முவாபாகாட் நேஷனலில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறாயினும், அம்னோ பெர்சாத்துவுடன் முரண்படுகிறது. இது தளர்வான ஆளும் கூட்டணியில், மிகப்பெரிய கட்சியாக, அதற்கேற்ற மரியாதையுடன் கருதப்படவில்லை என்று அது கூறுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்பட்டதை மறந்து, அது சில நேரங்களில் இன்னும் தாங்கள் மேலானவர்கள் என்ற எண்ணத்தில் சிக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெகவுடன் பணியாற்றுவதை நிராகரிக்கும் முயற்சியில், மொகிதின் மற்றும் பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான முடிவு அம்னோவின் கூட்டு முடிவு என்று அனுவார் கூறினார்.

அம்னோவுக்கு துணைப் பிரதமர் விஷயத்தில், இது அம்னோவை பிரதிநிதித்துவப்படுத்துவதா அல்லது தனிநபர்களுக்கு பயனளிப்பதா என்பதை கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அனுவார் கேள்வி எழுப்பியுள்ளார்.