Home One Line P1 அஸ்மின் அலியை கோம்பாக்கில் எதிர்க்க உலு கெலாங் சட்டமன்ற உறுப்பினர் தயார்

அஸ்மின் அலியை கோம்பாக்கில் எதிர்க்க உலு கெலாங் சட்டமன்ற உறுப்பினர் தயார்

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலு கெலாங் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப், வரும் பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்காக, தாம் அமானா கட்சியிலிருந்து பிகேஆர் கட்சிக்கு வரவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

“ஒரு வேளை நான் ஆரோக்கியமாக இருந்தால் அஸ்மின் அலியை எதிர்த்து கோம்பாக் நாடாளுமன்றத்தில் போட்டியிட தயாராக இருக்கிறேன். மேலும், நான் வெற்றிப் பெறமுடியும் என்று நம்பிக்கைக் கூட்டணி தலைமை கருதினால் இது சாத்தியம். கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி பிகேஆர் வசம் இருப்பதால், நான் பிகேஅர் உறுப்பினராக இருக்கவும் தயார்,” என்று சாரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தற்போது, அஸ்மின் அலி பிரதமர் மொகிதின் யாசினின் பலம் என்றே கூற வேண்டும். அவர் கோம்பாக்கில் மூன்று தவணைகளாக வென்றுள்ளார்.
ஆனால், பிப்ரவரியில், செரட்டன் நகர்வு காரணமாக அவர் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகி மொகிதினுடன் இணைந்தார். அதனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

முன்னதாக, மெரு சட்டமன்ற உறுப்பினர் போல், சாரி பிகேஆர் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், சாரி அதனை மறுத்தார்.

கோம்பாக் பகுதியில் வாழும் பல்வேறு தரப்பு மக்கள் தமக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.

“இந்தியர்கள், சீனர்கள், பஞ்சாபி, பூர்வக்குடியினர் என்னை சந்தித்து கோம்பாக்கில் அஸ்மினை எதிர்த்து நிற்க அறிவுறுத்தியுள்ளனர். கோம்பாக்கில் அவர்கள் 5,000 முதல் 7,000 பேர் வரையிலும் திரட்ட முடியும் என்று கூறினர்,” என்று அவர் கூறினார்.

கோம்பாக் நாடாளுமன்றம் 77 விழுக்காடு மலாய்க்காரகள் வாக்குகளைக் கொண்டுள்ளது. இந்தியர்கள், சீனர்கள் வாக்குகள் 11 விழுக்காடு மட்டுமே.