Home One Line P1 சபாவிலிருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை

சபாவிலிருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை

503
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவிலிருந்து வரும் அனைத்து தனிநபர்களுக்கும், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நவம்பர் 25 முதல் நடைமுறையில் இருக்காது என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

சபாவை விட்டு வெளியேற விரும்புவபவர்கள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

தொற்று இல்லாதவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 தொற்றுக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்துதல், சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இதற்கிடையில், அறிகுறிகளைக் காட்டும் நபர்களுக்கு அவர்கள் மேலும் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள், ” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சபாவிலிருந்து வருபவர்கள் அனைவரும் கொவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுக்காகவும் பரிசோதிக்கப்படுவார்கள். ஆனால் இனி எந்தவொரு தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட வேண்டியதில்லை.

நாட்டின் கொவிட் -19 நிலைமை குறித்த ஆபத்து மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தீபகற்பத்தில், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பகுதிகளுடன் ஒப்பிடும்போது சபாவில் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் போக்கைக் குறிக்கிறது.