Home One Line P1 கொவிட்19: 28 விழுக்காட்டினர் மருத்துவ சிகிச்சைக்கு முன்பே இறந்துவிட்டனர்

கொவிட்19: 28 விழுக்காட்டினர் மருத்துவ சிகிச்சைக்கு முன்பே இறந்துவிட்டனர்

440
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நவம்பர் 10-ஆம் தேதி வரை கொவிட் -19 இறப்புகளில் மொத்தம் 28 விழுக்காட்டு சம்பவங்கள் சிகிச்சை பெறுவதற்கு முன்பு இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார்.

“216 இறப்புகளில் (நவம்பர் 10 வரை), 72 விழுக்காடு பேர் சுகாதார அமைச்சகத்தில் சிகிச்சை பெற்ற பின்னர் மரணமுற்றனர். மீதமுள்ள 84 இறப்புகள் (28 விழுக்காடு) நோயாளி மருத்துவ சிகிச்சைக்கு முன்பே இறந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இறந்தவர்களில் பெரும்பாலோர் கடுமையான நிலையில் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 55 விழுக்காடு 4- வது நிலையிலும், 27 விழுக்காடு 3- ஆம் கட்டத்திலும் வந்துள்ளனர் என்று அடாம் கூறினார்.

#TamilSchoolmychoice

அனைத்து இறப்புகளிலும் 90 விழுக்காடு கடுமையான நிமோனியா மற்றும் உறுப்பு செயலிழப்பு காரணமாக நிகழ்ந்தன. மற்றவர்கள் கடுமையான இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிற நாட்பட்ட நோய்களால் இறந்துள்ளனர்.

நவம்பர் 10 வரை ஏற்பட்ட 300 இறப்புகளில் 67 விழுக்காடு ஆண் நோயாளிகள். அவர்களில் 86 விழுக்காட்டினர் மலேசியர்கள்.

மொத்தம் 85 விழுக்காடு பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

“கொவிட் -19 இறப்பு அபாயத்திற்கு காரணமான காரணிகள் வயது. 50 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் போன்ற நோய்களால் இறந்துள்ளனர்,” என்று அடாம் மேலும் கூறினார்.