Home One Line P2 விநாயகர் படத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜான் கார்டெர் நிறுவனம் மன்னிப்பு

விநாயகர் படத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜான் கார்டெர் நிறுவனம் மன்னிப்பு

627
0
SHARE
Ad

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஆடை உற்பத்தி நிறுவனமான ஜான் காட்டெர் தயாரித்த ஆடைகளில் விநாயகர் படங்கள் பதிக்கப்பட்டதை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குட்டை முழங்கால் சட்டையில் விநாயகர் படத்தை பதித்து இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக பலர் சாட்டியுள்ளனர்.

இது குறித்து ஜான் காட்டெர் நிறுவனத்திடம், பிரேசிலுகான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, உடனடியாக விநாயகர் படங்களை நீக்கவும், ஏற்கெனவே கடைகளுக்கு அனுப்பப்பட்ட உடைகளும் திரும்பப் பெறவும் ஜான் காட்டெர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

விநாயகர் படம் பதித்த ஆடைகளை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டதாகவும், விளம்பரங்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஜான் காட்டெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜான் காட்டெர் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.