Home One Line P1 ‘நிபந்தனைகளுடன் மொகிதினுடன் இணையலாம்!’- மகாதீர்

‘நிபந்தனைகளுடன் மொகிதினுடன் இணையலாம்!’- மகாதீர்

591
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். முன்னதாக, தாமும், தமது பெஜுவாங் கட்சி நண்பர்களும் 2021 வரவு செலவு திட்டத்தை அங்கீகரிக்கப்போவதில்லை என்று துன் மகாதீர் கூறியிருந்தார்.

ஆஸ்ட்ரோ அவானியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் பேசிய மகாதீர், பல தசாப்தங்களுக்கு முன்னர் ஜேர்மனியின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு ஒத்துழைத்த பிரிட்டனின் தொழிற்கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சியைக் குறிப்பிட்டுக் கூறினார்.

“அதுதான் வழி, வழிகள் உள்ளன. ஆனால், அவருடன் இணைவது பற்றியதை இப்போது சொல்லத் தேவையில்லை. நெருக்கடி காலங்களில் நாம் அரசியலை, குறிப்பாக கட்சி அரசியலைக் குறைக்கலாம். தேசிய அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்று நான் இன்னும் நினைக்கிறேன். நாம் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறோம். நமது பொருளாதாரம் சரிந்து வருகிறது, தொற்றுநோயை எதிர்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மொகிதினுடன் சமரசம் செய்ய அவரை வற்புறுத்துவதற்கு தேசிய கூட்டணி மேற்கொள்ளும் முயற்சிகள் உள்ளதா என்றும் மகாதீரிடம் கேட்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆறு அம்னோ தலைவர்களுடன் ஒத்துழைக்க முடியாததால் அவர் இதனை நிராகரித்ததாகக் கூறினார்.