கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, மத்திய அரசை மாற்றுவதற்கு போதுமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியும் என்று தம்மிடம் கூறியதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், என்ன நடந்தது என்பது நேர்மாறானது என்று அவர் நேற்று அவானி சிறப்புச் சந்திப்பில் கூறினார்.
டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு எந்தவிதமான சட்டபூர்வமான பெரும்பான்மையும் இல்லை என்பதை மக்களை நம்ப வைக்க அவர் முயற்சித்ததை துன் மகாதீர் சுட்டிக் காட்டினார்.
“அவர் (துங்கு ரசாலி) அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறார். நாங்கள் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருந்தது.
“அரசாங்கத்தை விட்டு வெளியேற போதுமான நபர்களை அரசாங்கத்திடமிருந்து அடையாளம் காண முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை, ” என்று மகாதீர் கூறினார்.
நவம்பர் 23-ஆம் தேதி, துங்கு ரசாலி, மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அசிசான் ஹருணுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மக்களவையில் 2021 வரவு செலவு திட்டம் மீதான் வாக்கெடுப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டிர்ந்தார். தற்போதைய அரசாங்கத்தின் பெரும்பான்மையை தீர்மானிக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.