Home One Line P1 ‘ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தெரியாது!’- ஹிஷாமுடின்

‘ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தெரியாது!’- ஹிஷாமுடின்

530
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரமாக தேடப்படும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.

தப்பியோடிய தொழிலதிபரை நாட்டிற்கு அழைத்து வர விஸ்மா புத்ரா மலேசிய காவல் துறைக்கு உதவாததற்கு எந்த காரணமும் இல்லை என்று ஹிஷாமுடின் விளக்கினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவை அடிப்படையாகக் கொண்டு ஜோ லோவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து ஆர்.எஸ்.என். ராயர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

“அவர் (ஜோ லோ) சீனாவில் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. காவல் துறையினர் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிவித்தால், ஜோ லோவை மீண்டும் நீதிக்கு கொண்டு வர விஸ்மா புத்ரா உதவ முடியும்,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

1எம்டிபி விசாரணைக்கு உதவ கோலாலம்பூர் கீழ்நிலை நீதிமன்றம் ஜோ லோவுக்கு எதிராக கைது ஆணையை பிறப்பித்தது.

ஜோ லோ 1எம்டிபி நிதி முறைகேடு வழக்கில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் தேடப்படுவது மட்டுமல்லாமல், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட விசாரணையில் ஒரு முக்கிய சாட்சியாகவும் உள்ளார்.

2018 ஜூலை 5 அன்று, ஜோ லோ சீனாவின் மக்காவ் நகருக்கு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 22- ஆம் தேதி, முன்னாள் தற்காப்பு அமைச்சராக இருந்த ஹிஷாமுடின் 1எம்டிபி வழக்கைத் தீர்ப்பதற்கு தொழிலதிபரைக் கண்டுபிடிக்க முன்வந்தார்.