பெரும்பான்மை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு தனிப்பட்ட வாக்கெடுப்புக்கு எதிராகத் தெரிவு செய்தனர்.
“அமானா தலைவர், அமனா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவரின் செய்தியை அனுப்புவதற்கு நேரம் கிடைத்திருக்கவில்லை அல்லது கவனிக்கப்படவில்லை. எனவே, அமானா நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, நேற்று போக்கோக் செனாவுக்கு (மாபுஸ் ஒமார்) ஆதரவாக எழுந்து நிற்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
“நடைமுறையைப் பொறுத்தவரை, வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவது, மூன்றாவது வாசிப்பின் போது தீர்மானிக்கப்படுகிறது. அப்போது பார்த்துக் கொள்வோம், ” என்று ஹனிபா கூறினார்.