Home One Line P1 இனி வரவு செலவு திட்டத்தை நிராகரித்து எந்த பயனும் இல்லை!- துன் மகாதீர்

இனி வரவு செலவு திட்டத்தை நிராகரித்து எந்த பயனும் இல்லை!- துன் மகாதீர்

584
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வியாழக்கிழமை வரவு செலவு திட்டம் கொள்கை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, எழுந்து நின்று எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, எதிர்க்கட்சியினர் நடப்பு அரசை ஆதரிப்பதாகக் கொள்ளப்படுகிறது.

குழு அளவிலான விவாதத்தில் வரவு செலவு திட்டம் நிராகரிக்கப்படும் என்பதெல்லாம் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையால் ஏமாற்றமடைந்த மக்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் திசை திருப்பும் முயற்சி இது. மொகிதின் யாசின் தலைமையிலான பின் கதவு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மத்தியத்தில் மட்டுமல்லாமல், சபாவிலும் தேர்தல் மூலமாக ஆட்சி பறிக்கப்பட்டுள்ளது. நடப்பு அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறது,” என்று அவர் தமது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை நடந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில், குரல் வாக்கெடுப்பின் மூலமாக அது நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியினரும் அதற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றினர்.

“இது வித்தியாசமானது. மொகிதினின் அரசாங்கம் அமைக்கப்பட்ட வரை, எதிர்க்கட்சி அவரை நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர முயன்றது.வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும்போது, ​​எதிர்க்கட்சிகள் நிராகரிக்கும் என்று சொன்னார்கள்,” என்று மகாதீர் சாடினார்.