Home One Line P2 திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது

684
0
SHARE
Ad

திருவண்ணாமலை : இன்று தமிழகத்திலும் மலேசியாவிலும் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது.

திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கமாகும். அந்த நாளில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் இலட்சக்கணக்காணவர்கள் கூடுவார்கள்.

எனினும் இந்த முறை கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக வழக்கம்போல் இலட்சக் கணக்கானோர் திருவண்ணாமலையில் இன்று குவியவில்லை. இருப்பினும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் மலைமீது ஏற அனுமதிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

தமிழகத்தின் தொலைக் காட்சி அலைவரிசைகள் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்தன.

இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு இல்லங்களிலும் ஆலயங்களிலும் இந்துப் பெருமக்கள் குறிப்பாக தமிழர்கள் அகல் விளக்கேற்றி திருக்கார்த்திகையைக் கொண்டாடுவார்கள்.